search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் தனபாலன்"

    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது போல் இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று என்.ஆர். தனபால் தெரிவித்தார். #DMK #NRDhanapalan
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 519 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.தனபாலன் தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று கூறி விட்டனர். தற்போது 18 தொகுதிகளும் காலியான தொகுதியாக உள்ளது.

    இந்த தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி என 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 519 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

    இதுபற்றி என்.ஆர்.தனபாலனிடம் ‘மாலைமலர்’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன். இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ‘சீட்’ கேட்பேன். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகுதான் இது குறித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.விடம் தோற்றது. இதற்கிடையே அத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மீண்டும் போட்டியிடுமா? என்று அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தி.மு.க.விடம் கேட்பது பற்றி தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். #DMK #NRDhanapalan
    கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும் என என்ஆர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லை பெரியாரில் ஏற்கனவே 123 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய அணை நல்ல நிலையில் இருக்கிறபோது புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் அனுமதி வழங்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு செல்வாக்கும், வாக்கு வங்கியும் இல்லாததால் தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மத்திய அரசின் கண் துடைப்பு நாடகம் என்று என்.ஆர்.தனபாலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Petrol #Diesel

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயை எட்டிய நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசக்கு எதிரான நிலைப்பாடு உருவானதை கண்டு ரூ.2.50 குறைப்பதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் வரியையும் ரூ.2.50 குறைக்க சொல்லி வலியுறுத்துகிறது.

    இது மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம். இந்த விலை குறைப்பினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

    நடிகர் கருணாசின் அவதூறு பேச்சுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #actorkarunas

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கருணாஸ் நாடார் சமுதாயத்தை இழிவாகவும், கேவலமாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

    அமைதியாக வாழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்களை சீண்டி பார்க்க ஆசைப்படுகிறாரா? அமைதியையே விரும்பும் நாடார் சமுதாய மக்களை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்” என்று கூறி உள்ளார்.


    சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், “பொது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கருணாஸ் பத்திரிகை நடத்தும் நாடார் சமுதாயத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளது கண்டனத்திற்குறியது. பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று பொதுமக்களிடையே ஜாதி துவே‌ஷத்தை தூண்டும் இவ்வித பேச்சுக்களை கருணாஸ் தவிர்க்க வேண்டும்” என்று கூறி உள்ளார். #actorkarunas

    தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது என்று என்.ஆ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது.

    மக்களின் சந்தேகங்களை போக்குவதற்காகவும், தமிழக அரசு மீதுள்ள களங்கத்தை போக்கிடவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சாமி சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு முழுமையான விசாரணையை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×